உயர்தரம், சதாரணதரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிப்பு!
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சை இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்வரும் தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 Comments